விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பிரியாங்காவின் திடீர் முடிவு: ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை பிரியங்கா நல்காரி தனது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News image
Updated On :22 மார்ச் 2024, 11:01 am

DIN

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'ரோஜா' தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி.

இவர், தொழிலதிபர் ராகுல் வர்மாவை கடந்தாணடு மார்ச் 23 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோயிலில் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பிறகு வெளிநாட்டில் கணவருடன் வாழ்ந்து வந்தார். இதனிடையே தமிழ்நாட்டில் நடக்கும் படப்பிடிப்புக்கு வந்து செல்ல சிரமமாக இருப்பதாக அவர் தரப்பில் கூறப்பட்டது. இதனால் சீதாராமன் தொடரிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்தார். ஆனால், தற்போது அவர் நளதமந்தி என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் பிரியங்கா நல்காரி, தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சமீபத்தில் நீக்கினார். அதேபோல், அவரது கணவரும் பிரியங்காவுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கினார்.

பிரியங்கா நல்காரியும் அவரது கணவர் ராகுல் வர்மாவும் பிரிந்ததாக தகவல் பரவி வந்த நிலையில், அவரே அதை உறுதிபடுத்தினார்.

இந்த நிலையில், நடிகை பிரியங்கா நல்காரி தனது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கியுள்ளார்.

மேலும், விளம்பரப் படுத்துவதற்காக ரசிகர்கள் அனுப்பிய சேலைகள், நகைகள் உள்ளிட்ட பொருள்களை முறையாக திருப்பி அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியங்கா நல்காரி இன்ஸ்டாகிராமிலிருந்து விலகியுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.