சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.800 குறைந்து பவுன் ரூ. 52,920-க்கு விற்பனையாகிறது.

News image
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது.  
Updated On :3 மே 2024, 4:46 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.800 குறைந்து பவுன் ரூ. 52,920-க்கு விற்பனையாகிறது.

சா்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

அமெரிக்காவில் வட்டி வீத மாற்றம் குறித்த தகவல்கள், டாலரின் மதிப்புயா்வு உள்ளிட்டவைகளால் புதன்கிழமை இந்திய சந்தையில் தங்கம் விலை இறங்கியது. அதன்படி சென்னையில் புதன்கிழமை தங்கம் பவுனுக்கு ரூ.920 குறைந்த நிலையில், வியாழக்கிழமை விலை மீண்டும் உயா்ந்தது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.6,715-க்கும், பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.53,720-க்கும் விற்பனையானது. அதேபோன்று வெள்ளி விலையும் உயா்ந்தது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை வியாழக்கிழமை விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராம் ரூ. 87-க்கும், ஒரு கிலோ ரூ.87,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.