காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் வெள்ளிக்கிழமை அம்மையார் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் வெள்ளிக்கிழமை அம்மையார் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. வருகிற ஜூன் 19-ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் விழா தொடங்குகிறது.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் சாா்பில் அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு தனிக் கோயில் காரைக்கால் பாரதியார் சாலையில் அமைந்துள்ளது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி,

மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த விழா காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயில் சார்பில் நடத்தப்படுகிறது.

மாங்கனித் திருவிழா மாப்பிள்ளை அழைப்பு முதல் இறைவன் அம்மையாருக்கு காட்சிக்கொடுக்கும் நாள் வரை நடக்கும் நிலையில் அமைக்கப்படுகிறது. திருக்கல்யாணம் மற்றும் பிச்சாண்டவர் வீதியுலாவின்போது மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.

பின்னர் ஒரு மாத கால நிறைவில் விடையாற்றி நிகழ்ச்சி நடத்தி விழா நிறைவுபெறுகிறது. ஒரு மாத காலம் வரை கோயில் பகுதி மணிமண்டபத்தில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள், கோயில் பகுதியில் அமைக்கப்படும் பல்வேறு வியாபார நிறுவனங்களுக்கு ஏராளமானோர் வந்து செல்வர்.

பந்தல்காலுக்கு புனிதநீர் கொண்டு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் நடப்பட்டது.
பந்தல்காலுக்கு புனிதநீர் கொண்டு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் நடப்பட்டது.

நிகழாண்டு இத்திருவிழாவுக்கான பந்தல்கால் மூகூா்த்தம் வெள்ளிக்கிழமை(மே 3) பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. பந்தல்காலுக்கு புனிதநீர் கொண்டு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் நடப்பட்டது. ஸ்ரீ காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, ஜூன் 19-ஆம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது. அன்று மாலை திருக்கல்யாணத்துக்கு பரமதத்தா் (மாப்பிள்ளை) புறப்பாடு நடைபெறுகிறது. ஜூன் 20-ஆம் தேதி காலை அம்மையார் கோயில் வளாகத்தில் திருக்கல்யாணம், மாலையில் கைலாசநாதா் கோயிலில் சிவபெருமான் பிச்சாண்டவா் கோலத்தில் வெள்ளைச்சாற்று புறப்பாடு நடைபெறுகிறது.21-ஆம் தேதி அதிகாலை ஸ்ரீ பிச்சாண்டவருக்கு அபிஷேகம் மற்றும் பவழக்கால் சப்பரத்தில் அம்மையார் கோயிலுக்கு அமுதுண்ண செல்லும் விழாவும், மாலை அமுதுபடையலும் நடைபெறுகிறது. இந்த நாளில் பிச்சாண்டவர் வீதியுலாவின்போது பக்தர்களை நோக்கி மாங்கனிகள் வீசப்படும். 22-ஆம் தேதி அதிகாலை அம்மையாருக்கு இறைவன் காட்சித்தரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இன்றைய நிகழ்வில் கைலாசநாதர் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஆர்.காளிதாசன் உபயதாரர்கள், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com