ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

ஆம் ஆத்மியின் மக்களவைத் தேர்தல் பிரசார பாடலில் கட்சி மாற்றங்கள் செய்ததை அடுத்து தில்லி தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் ஒப்புதல்
ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

புது தில்லி: ஆம் ஆத்மியின் மக்களவைத் தேர்தல் பிரசார பாடலில் கட்சி மாற்றங்கள் செய்ததை அடுத்து தில்லி தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசார பாடலை எழுதி குரல் கொடுத்த ஆம் ஆத்மி எம்எல்ஏ திலீப் பாண்டே, வெள்ளிக்கிழமை பாடல் அங்கீகரிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் பிரசார பாடல் கடந்த 25-ஆம் தேதி தில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. சுமார் 2 நிமிடங்கள் ஓடும் இந்தப் பாடலை அந்த கட்சியின் எம்எல்ஏ திலீப் பாண்டே எழுதி பாடியுள்ளார்.

இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது.

இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் விளம்பரக் குறியீடுகளை மீறியதால், பாடலில் வரும் காட்சிகளை மாற்றியமைக்க ஆம் ஆத்மியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தில்லி தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசார பாடலில் கட்சி மாற்றங்கள் செய்ததை அடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மீண்டும் சமர்ப்பித்ததாகவும், அதைத் தொடர்ந்து பாடலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி பிரச்சார பாடலில், பாஜக மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி தேர்தல் ஆணையம் அதற்கு தடை விதித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com