நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இந்தியாவில் 1.8 லட்சம் கணக்குகளை முடக்கிய எக்ஸ் சமூக வலைதளம்!

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளம், இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 1.8 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

News image

எலான் மஸ்க்

Updated On :11 மே 2024, 6:55 pm IST

அமெரிக்கத் தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளம், இந்தியாவில் கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 25 வரை, 1,84,241 கணக்குகளை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, அனுமதியின்றி பகிரப்படும் நிர்வாணப் படங்கள் போன்றவற்றைப் பதிவிட்டக் கணக்குகளை நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததற்காக 1303 கணக்குகளை நீக்கியுள்ளது எக்ஸ் நிறுவனம்.

மொத்தமாக, 185,544 கணக்குகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ள எக்ஸ் நிறுவனம், இந்தியாவின் 2021-ம் ஆண்டின், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி இந்தியப் பயனர்களிடமிருந்து 18,562 புகார்களை, தமது குறை தீர்க்கும் வழிமுறைகள் மூலம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

கூடுதலாக, மேல்முறையீடு செய்த 118 பயனர்களின் கணக்குகளை இடைநீக்கம் செய்யாமல் பரிசீலித்துள்ளது.

‘4 கணக்குகளை, அதன் நிலைமைகேற்ப மறு ஆய்வு செய்து இடைநீக்கத்தை ரத்து செய்தோம். மீதமுள்ள கணக்குகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஒரு மாத காலத்தில் கணக்குகள் குறித்த பொதுவான கேள்விகள், 105 பயனாளர்களின் கோரிக்கைகள் மூலம் கேட்கப்பட்டுள்ளன’ என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் பெரும்பாலான புகார்களாக, கணக்குகள் மீதான தடை நீக்கம் (7,555), வெறுப்புப் பிரசாரம் (3,353), வயது வந்தோருக்கானப் பதிவுகள் (3,335), அவதூறு/வன்கொடுமை (2,402) போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில், கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 25 வரை, எக்ஸ் தளம் 2,12,627 கணக்குகளையும், பயங்கரவாதத்தை ஊக்குவித்ததற்காக 1,235 கணக்குகளையும் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.