அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

அவிநாசி ஜவுளி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானது.
அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

அவிநாசி: அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள ஜவுளி கடையில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி மேற்கு ரத வீதியில் ஜவுளி கடையொன்று உள்ளது. 3 அடுக்குகள் கொண்ட இக்கடையில் 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டி சென்றுள்ளனர். திங்கள்கிழமை அதிகாலை திடீரென பூட்டிருந்த கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கி உள்ளது.

அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!
நாகை எம்பி எம்.செல்வராசு காலமானார்

இதை அறிந்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதற்குள் கடைக்குள் தீ வேகமாக பரவத் தொடங்கியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு இரு தீயணைப்பு வாகனங்களில் வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர், தீயை நீண்ட நேரம் போராடி அனைத்துனர்.

இருப்பினும் முதல் தளத்திலிருந்த பல லட்சம் மதிப்பிலான ஏராளமான ஜவுளி வகைகள் முற்றிலும் எரிந்து சேதமானது. சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு நீண்ட நாள்களுக்கு பிறகு அவிநாசியில் கனமழை பெய்தது. இருப்பினும் மின் கசிவு காரணமாக ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் அவிநாசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com