விபத்து காரணமாக கடலூர் அருகே நடுவழியில் அரை மணி நேரமாக நின்ற ரயில்!
கடலூர்- விருத்தாச்சலம் ரயில் பாதையில் கிடந்த இருசக்கர வாகனம் மீது காரைக்கால் - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.


கடலூர்- விருத்தாச்சலம் ரயில் பாதையில் கிடந்த இருசக்கர வாகனம் மீது காரைக்கால் - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
காரைக்காலிருந்து பெங்களூரு செல்லும் காரைக்கால் - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர்- விருத்தாச்சலம் பாதையில் வந்துகொண்டுருந்த போது ரயில் வருவதை கவனிக்காமல் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற இரண்டு பேர் பயத்தில் ரயில்வே தண்டவாளத்திலேயே தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பியதால் இரு சக்கர வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ஆனால் நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இதன் காரணமாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...