ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

திருச்சிற்றம்பலம் இயக்குநருடன் இணைந்த மாதவன்!

மித்ரன் கே. ஜவஹர் இயக்கும் புதிய படத்தில் மாதவன் இணைந்துள்ளார்.

News image
Updated On :3 நவம்பர் 2024, 10:20 am IST

திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குநர் மித்ரன் கே. ஜவஹர் இயக்கும் புதிய படத்தில் மாதவன் இணைந்துள்ளார்.

யாரடி நீ மோகினி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மித்ரன் கே. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் - திருச்சிற்றம்பலம். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், மித்ரன் கே. ஜவஹர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மாதவன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், சாய் தன்ஷிகா, உதய் மகேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அதிர்ஷ்டசாலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அதிர்ஷ்டசாலி படத்தின் முதல் பார்வை போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.