பெரிய புகழ்பெற்றவர்கள் கட்சி தொடங்கினாலும் விசிக-வுக்கு போட்டியாளராக முடியாது: திருமாவளவன்
எவ்வளவு பெரிய புகழ்பெற்றவர்கள் புதிய கட்சி தொடங்கினாலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாளராக ஆக முடியாது


விழுப்புரம்: எவ்வளவு பெரிய புகழ்பெற்றவர்கள் புதிய கட்சி தொடங்கினாலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாளராக ஆக முடியாது என திண்டிவனத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் திலிபன் தாய் ரானியம்மாள் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், தமிழகத்தில் எவ்வளவு பெரிய புகழ்பெற்றவர்கள் புதிய கட்சி துவங்கினாலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாளாராக ஆக முடியாது. ஏனென்றால் நம்முடைய களம் முற்றிலும் மேலானது. இந்த களத்தில் யாரும் நம்மோடு போட்டிக்கு வரமுடியாது. இதை நம்மால் மட்டும்தான் செய்ய முடியும். நம்மால் மட்டும்தான் இப்படியொரு இயக்கத்தை நடத்த முடியும்.
இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பணியிடங்கள் அதிகரிப்பு!
மேலும் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து யாரோ ஒருவர் கட்சி தொடங்கினாலும் அவர்கள் பெயரை பதிவிட்ட பின்பு தான் விடுதலைச் சிறுத்தைகள் பெயரை பதிவிடுகிரார்கள். எனவே நாம் இன்னும் விழுப்பாக இருப்போம். சமுக ஊடங்களில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில் நாம் அவரசப்பட்டு எதையும் பதிவிட்டுவிடக் கூடாது என கட்சியினருக்கு அறிவுரை வழங்கியவர், திருமாவளவன் சாரசரி அரசியல்வாதி அல்ல என்பதை காலம் சொல்லும். அதை புரிந்துகொள்வதற்கே இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும் என்றார்.
இந்த நிகழ்வில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...