தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது.

ராமேசுவரம் மீனவர்கள் கைது.

Published On :

எல்லை தாண்டி மீன்பிடித்த போது, ராமேசுவரம் மீனவா்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து விசைப் படகுகளில், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர், விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து,13 மீனவர்களையும் கைது செய்தனர்.

13 மீனவா்களைக் கைது செய்து, இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

மீனவர்கள் கைது தொடர்கதையாகி வரும் நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் 12 பேரை, பருத்தித்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.