2024-25 ஆம் ஆண்டிற்கு 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகையாக ரூ. 90 லட்சத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (18.11.2024) 2024-25 ஆம் ஆண்டிற்கு 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகை ரூ. 90 லட்சம் வழங்கி செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், இன்றைக்கு ஒன்பது தமிழறிஞர்களுக்கான நூல்களை நாட்டுடமையாக்கப்பட்டு, விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, நினைவில் வாழக்கூடிய கவிஞர்களுடைய குடும்பத்தாருக்கு அவர்களுடைய மரபுரிமை வாரிசுதாரர்களுக்கு இந்த விருதுகள் தலா ரூ. 10 லட்சம் வீதம் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க: ஜான்சி மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட ஹீரோ! ஆனால்..
அவர்களும் நீண்ட நாள்களாக இந்த விருதுகளை எதிர்ப்பார்த்திருந்தார்கள். அரசு, தங்கள் குடும்பத்தார் கவிஞர்கள் எழுதிய நூல்களை எல்லாம் நாட்டுமையாக்குவார்கள் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதை முதலமைச்சர் ஸ்டாலின், அந்த எதிர்ப்பார்ப்பை ஈடு செய்யக்கூடிய வகையில் சட்டமன்றத்தில் அறிவிப்பிற்கிணங்க இன்றைக்கு அதை நாட்டுமையாக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசுத் தொகை தலா ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், அவர்கள் எல்லாம் அந்த விருதுகளை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். மேலும், நாட்டுடமையாக்கப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழ் அறிஞர்களுக்கு மரியாதை செய்கின்ற வகையிலும், மேலும் தமிழ் மொழியை செம்மைப்படுத்துகின்ற வகையிலும் முதல்வர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, இன்றைக்கு தமிழ் வளர்ச்சித் துறை அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘தமிழ்நாடு நாள்’ விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசளிப்பு

கரூரில் 25 பயனாளிகளுக்கு ரூ. 74.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்! அமைச்சா் வழங்கினாா்
பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு முறைகேடு: அமலாக்கத் துறை சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல்







