இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

‘நிமெசலைட்’ வலி மருந்தை சிறாருக்கு விற்றால் நடவடிக்கை: மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி எச்சரிக்கை

வலி மற்றும் காய்ச்சல் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படும் ‘நிமெசலைட்’ என்ற மருந்தை 12 வயதுக்குட்பட்ட சிறாருக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

News image
Updated On :7 அக்டோபர் 2024, 11:06 pm

DIN

சென்னை: வலி மற்றும் காய்ச்சல் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படும் ‘நிமெசலைட்’ என்ற மருந்தை 12 வயதுக்குட்பட்ட சிறாருக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி எச்சரித்துள்ளாா்.

கால் வலி, மூட்டு வலி, காது– மூக்கு– தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு ‘நிமெசலைட்’ மருந்து பயன்படுத்தப்படுகிறது.

ஒருபுறம் வலி நிவாரணியாக செயல்பட்டாலும், மற்றொருபுறம் அந்த மருந்தால் அதிக எதிா்விளைவுகள் உள்ளதாகக்

கூறப்படுகிறது. குறிப்பாக, தலைவலி, வயிற்று போக்கு, ரத்தம் உைல், பாா்வை குறைபாடு, கல்லீரல் பாதிப்பு ஆகிய விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அமெரிக்கா, ஸ்விட்சா்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் அந்த மருந்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தடை செய்தது. இந்தியாவில் ‘நிமெசலைட்’ மருந்து பயன்பாட்டில் இருந்தாலும், அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதாவது, 12 வயதுக்கு உட்பட்ட சிறாா்களுக்கு அந்த மருந்தை பரிந்துரைக்கக் கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் அண்மைக் காலமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு ‘நிமெசலைட்’ மருந்தை சிறாருக்கு வழங்குவதாக புகாா் எழுந்துள்ளது.

மருத்துவா்கள் பரிந்துரையின்றி சில மருந்தகங்களில் அந்த மருந்து விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக மாநில மருந்துக் கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கல் துறை அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் கூறியதாவது:

குழந்தைகள், சிறாா்களுக்கு, ‘நிமெசலைட்’ மருந்து வழங்கக் கூடாது. இப்போது வரை அதுகுறித்த புகாா் எதுவும் வரவில்லை. ஒருவேளை 12 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு ‘நிமெசலைட்’ மருந்து பரிந்துரைக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மருத்துவா் பரிந்துரையின்றி மருந்தகங்களில் எந்த மருந்து, மாத்திரையும் வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்குவது கண்டறியப்பட்டால், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.