எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கூலித் தொழிலாளி போக்சோவில் கைது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 5 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளி பத்திரசாமி
Updated On :11 அக்டோபர் 2024, 4:38 am

DIN

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 5 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவை மேட்டுப்பாளையம் அருகே காரமடை பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி வியாழக்கிழமை அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, காரமடையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன சிறுமி இதுகுறித்து தனது சகோதரியிடம் தெரிவித்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியை உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து காரமடை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் விரைந்து விசாரணை மேற்கொண்ட மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், காரமடையை சேர்ந்த கூலித் தொழிலாளி பத்திரசாமி (45) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.