தங்கம் விலை மீண்டும் உயர்வு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.56,960-க்கும், கிராம் ரூ.7,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.56,960-க்கும், கிராம் ரூ.7,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பவுன் ரூ.57 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், மக்கள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த வாரம் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து ஒரு சவரன் ரூ.56,800-க்கு விற்பனையாகி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அடுத்த இரண்டு நாள்களாக பெயரளவில் குறைந்த தங்கம் விலை, சனிக்கிழமை மீண்டும் உயரத் தொடங்கியது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ. 56,960-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கேரட் தங்கமும் ரூ. 216 உயர்ந்து ரூ. 62,136-க்கும், ஒரு கிராம் ரூ. 7,767-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தங்கம் பவுன் ரூ.57 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், மக்கள் கவலையடைந்துள்ளனர்.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி சனிக்கிழமை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ. 103-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ. 1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com