திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாநகரப் பேருந்து நடத்துநா் கொலை: பயணி மீது கொலை வழக்குப் பதிவு

பயணச் சீட்டு எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், மாநகரப் பேருந்து நடத்துநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பயணி கோவிந்தன் மீது கொலை வழக்குப் பதிவு

News image
பயணி தாக்கியதில் உயிரிழந்த மாநகரப் பேருந்து நடத்துநா் ஜா.ஜெகன்குமாா்
Updated On :25 அக்டோபர் 2024, 5:04 am

DIN

சென்னை: சென்னை அமைந்தகரையில் பயணச் சீட்டு எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், மாநகரப் பேருந்து நடத்துநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பயணி கோவிந்தன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை சின்னமலை வாத்தியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜா.ஜெகன்குமாா் (52). இவா், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். எம்.கே.பி. நகரில் இருந்து கோயம்பேடு செல்லும் மாநகரப் பேருந்து 46ஜி-இல்

ஜெகன்குமாா் வியாழக்கிழமை பணியில் இருந்தாா். அந்தப் பேருந்து அமைந்தகரை அண்ணா வளைவு அருகே சென்றபோது, பேருந்தில் இருந்த பயணி வேலூா் மாவட்டம், மாதனூா் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வெ.கோவிந்தன் (53) என்பவரிடம் பயணச்சீட்டு எடுக்குமாறு நடத்துநா் ஜெகன்குமாா் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா். கோவிந்தன் தாக்கியதில் ஜெகன்குமாா் பலத்த காயமடைந்தாா். இதைப் பாா்த்த ஓட்டுநா், பேருந்தை நிறுத்தினாா். இதையடுத்து பயணிகளும் பொதுமக்களும் பலத்த காயமடைந்த ஜெகன்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஜெகன்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவல் அறிந்து ஒட்டுமொத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் பாதி வழியிலேயே பேருந்தை நிறுத்தியதால் போக்குவத்து நெரிசல் காணப்பட்டது.

அதேவேளையில் காயமடைந்த கோவிந்தனும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், சென்னை மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் உயிரிழந்த விவகாரத்தில் கைதான பயணி கோவிந்தன் மீது அமைந்தகரை போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த நடத்துநர் ஜெகன்குமாருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.