திருத்தணியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 2 வயது ஆண் குழந்தை பலி

திருத்தணி முருகப்பா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 வயது ஆண் குழந்தை பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ
திருத்தணியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ
Published on
Updated on
1 min read

திருவள்ளூர்: திருத்தணி முருகப்பா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுபாயம் அடைந்தனர். இதில் 2 வயது ஆண் குழந்தை பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகப்பா நகரில் மகேஷ் என்பவர் வீட்டில் முதல் தளத்தில வசித்து வருபவர் பிரேம்குமார் (32) - மனைவி மஞ்சுளா (31). இந்த தம்பதியினருக்கு மிதுலன் (3), கபிலன் (2) எந்த இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு திடீரென வீட்டில் புகை மூட்டமாக இருந்துள்ளது. இதையடுத்து வெளியில் வந்து பார்த்த போது வீட்டின் கீழ் தளத்தில் 3 வாகனங்கள் எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரேம் குமார், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டிலிருந்து வெளியேற முற்பட்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்ததால், பிரேம்குமார் உள்பட நான்கு பேர் மீது தீ மளமள என பரவியதால் அலறி துடித்தனர்.

இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

திருத்தணியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ
அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்த நிலையில், பிரேம்குமார், மனைவி மஞ்சுளா, குழந்தை மிதுலன் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

தீ விபத்தில் குழந்தை கபிலன் இறந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்தில் குடியிருப்பின் கீழ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வானங்கள் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி காவல் நிலைய போலீசார், நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கீழ் தளத்தில் இருந்த வாகனங்கள் எப்படி தீ விபத்து ஏற்பட்டது, யாராவது தீ வைத்து கொளுத்தினார்களா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், திருத்தணி துணைக்காவல் கண்காணிப்பாளர் கந்தன் ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com