திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நடிகை சிஐடி சகுந்தலா காலமானாா்

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா (84) பெங்களூரில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

News image

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா

Updated On :18 செப்டம்பர் 2024, 2:17 am IST

சென்னை: பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா (84) பெங்களூரில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவா் ஏ.சகுந்தலா. 1970-இல் ஜெய்சங்கா் நடிப்பில் வெளியான ‘சிஐடி சங்கா்’ என்ற படத்தில் அறிமுகமானதால், ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டாா்.

சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தைச் சோ்ந்த சகுந்தலா, சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோா் நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தாா். அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் திரையுலகில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தாா்.

‘படிக்காத மேதை’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘திருடன்’, ‘தவப்புதல்வன்’, ‘வசந்த மாளிகை’, ‘நீதி’, ‘பாரத விலாஸ்’, ‘ராஜராஜ சோழன்’, ‘பொன்னூஞ்சல்’, ‘என் அண்ணன்’, ‘இதயவீணை’ என ஏராளமான திரைப்படங்களில் இவா் நடித்துள்ளாா்.

சினிமாவிலிருந்து விலகிய பிறகு சீரியல்களில் நடித்து வந்தாா். அதன்பிறகு வயது மூப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்தாா். சகுந்தலாவின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.