காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஏஐ மூலம் சித்திரிக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல்: ருக்மிணி வசந்த் புகார்

ஏஐ உதவியால் உருவாக்கப்பட்ட சித்திரிப்பு படங்கள் படங்கள் பரப்பப்பட்டு வருவதாக நடிகை ருக்மிணி வசந்த் புகார்

Rukmini Vasanth

நடிகை ருக்மிணி வசந்த் - கோப்புப் படம்

Published On :

செயற்கை நுண்ணறிவு மூலம் சித்திரிக்கப்பட்ட புகைப்படங்கள் பரப்பப்படுவதாக நடிகை ருக்மிணி வசந்த் புகார் அளித்துள்ளார்.

நடிகை ருக்மிணி வசந்த், தன்னைப் போன்ற புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் சித்திரித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக புகார் அளித்துள்ளார். மேலும், டீப்ஃபேக் உதவியுடன் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள் முற்றிலும் சித்திரிக்கப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.

Actress Rukmini Vasanth calls out viral deepfake pics, threatens legal action

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, என்னுடைய படம் என்று கூறி, இணையத்தில் சில ஏஐ புகைப்படங்கள் பரப்பப்படுவதாக நான் கண்டறிந்தேன். இந்தப் படங்கள் முற்றிலும் போலியானவை மற்றும் சித்திரிக்கப்பட்டவை.

இதுபோன்ற சித்திரிக்கப்பட்ட படங்களை உருவாக்குவதும் பரப்புவதும் தனியுரிமை மீதான கடும் மீறலாகும்.

இந்த விஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதுடன், இந்தப் படங்களை உருவாக்கிப் பரப்பியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார்.

சமீபகாலமாக டீப்ஃபேக் என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களை போன்று சித்திரிக்கப்பட்ட படங்களைப் பரப்பி வருவது அதிகரித்து வருகிறது.

Summary

Actress Rukmini Vasanth calls out viral deepfake pics, threatens legal action

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.