சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தது தொடர்பாக...
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி.
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி.
Published on
Updated on
1 min read

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், அவர் 471 நாள்களுக்குப் பிறகு புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

ஜாமீனில் விடுவிப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 15 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும், ரூ. 25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம், வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நிலையில், திமுகவினர் பலரும் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

உற்சாக வரவேற்பு

புழல் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திமுக மூத்த நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மாலை அணிவித்து செந்தில் பாலாஜியை வரவேற்றார்.

போக்குவரத்து பாதிப்பு

செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்துள்ளதை அடுத்து, திமுக தொண்டர்கள் பெருமளவில் திரண்டுள்ளதால், மாதவரம் - செங்குன்றம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.