இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

இஸ்ரேல் பிரதமரின் வருகை! சர்வதேச நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் ஹங்கேரி!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து ஹங்கேரி நாடு வெளியேறுவதைப் பற்றி...

News image

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

Updated On :3 ஏப்ரல் 2025, 2:41 pm IST

ஹங்கேரி நாட்டுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சென்றுள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அந்நாடு வெளியேறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் போரில் ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.

இருப்பினும், பிரதமர் நெதன்யாகு ஹங்கேரியின் தீவிர வலதுசாரி பிரதமரான விக்டோர் ஆர்பனின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து ஹங்கேரி நாடு வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் ஆர்பனின் தலைமைச் செயலாளரான ஜெர்ஜெலி குல்யாஸ் கூறுகையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அரசியலமைப்பிற்கும் சர்வதேச சட்டமுறைகளுக்கும் உள்பட்டு ஹங்கேரி அரசு மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,உலக அளவிலான போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரணட்டின் அடிப்படையில் அந்நபர் அதன் உறுப்பு நாடுகளில் கால் வைத்தால் அவரை கைது செய்து நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டபோது அவரது நெருங்கிய கூட்டாளியான ஹங்கேரி பிரதமர் ஆர்பன் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.