திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சூடானில் துணை ராணுவப்படையின் தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட 32 பேர் பலி!

சூடானில் துணை ராணுவப்படையின் தாக்குதலில் 32 பேர் பலியானதைப் பற்றி...

News image

சூடானில் துணை ராணுவப் படையின் தாக்குதலில் 32 பேர் பலி

Updated On :12 ஏப்ரல் 2025, 3:33 pm IST

சூடான் நாட்டில் துணை ராணுவப்படையினர் நடத்திய தாக்குதலில் 32 பேர் பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு தர்ஃபூர் மாநிலத்தின் தலைநகர் எல்-ஃபாஷரில் நேற்று (ஏப்.11) ராபிட் சப்போர்ட் ஃபோர்ஸஸ் எனும் துணை ராணுவப்படை நடத்திய டிரோன்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் அப்பகுதிவாசிகள் 32 பேர் கொல்லப்பட்டதாக சூடான் நாட்டு ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்டது. இதில், 4 பெண்கள், 10 குழந்தைகள் கொல்லப்பட்டதுடன், 17-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, எல்-ஃபஷர் நகரத்தின் அருகிலுள்ள ஜம்ஜம் நிவாரண முகாமின் மீதும் துணை ராணுவப்படைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக சூடானின் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து, வடக்கு தர்ஃபூரின் சுகாதாரத் துறை அமைச்சர் இப்ராஹிம் காதிர் கூறுகையில், ஜம்ஜம் முகாமானது நகரத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதாலும் தகவல் பரிமாறும் வசதிகளிலுள்ள குறைபாட்டினாலும் அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தெளிவானத் தகவல்கள் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, 2 ஆண்டுகளாக சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் ஜம்ஜம் முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜம்ஜம் முகாமின் மீது துணை ராணுவப்படை நடத்திய தாக்குதலில் அங்கு வசித்த குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என 25-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.