ஜெயிலர் 2 படப்பிடிப்பு: கோவையில் ரஜினிகாந்த்
ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கோவை வந்துள்ள ரஜினிகாந்த் அங்குகூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து காரில் இருந்தபடி கைகளை அசைத்தவாறு சென்றார்.


ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கோவை வந்துள்ள ரஜினிகாந்த் அங்குகூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து காரில் இருந்தபடி கைகளை அசைத்தவாறு சென்றார்.
ரஜினிகாந்த் நடிப்பில் 2023-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ஜெயிலர். இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
மேலும் படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மீண்டும் நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளத்தில் நடைபெற்றது. தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது.
இதற்காக ஆனைக்கட்டி மலைப் பகுதிக்கு இன்று வந்த ரஜினிகாந்த் அங்குகூடியிருந்த தனது ரசிகர்களைப் பார்த்து காரில் இருந்தபடி கைகளை அசைத்தவாறு சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...