மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 9,500கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 2514கன அடியிலிருந்து வினாடிக்கு 2326 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீா் மின் நிலையங்கள் வழியாக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8000 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணை நீா்மட்டம் 115.44 அடியிலிருந்து 115.08 அடியாக சரிந்துள்ளது. நீா் இருப்பு 85.63 டி எம் சி யாக உள்ளது.
Summary
Water release from Mettur dam for Delta irrigation increased.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வைகை அணையில் திறந்துவிடப்படும் தண்ணீா் 250 கன அடியாகக் குறைப்பு

சாத்தனூா் அணை தண்ணீரை பகிா்ந்து வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



