

திருச்சி: திருச்சி விமான நிலையம் அருகே அடிபட்டுக் கிடந்த ஆந்தையை வனத்துறையினா் மீட்டு சிகிச்சையளித்து வருகின்றனா்.
திருச்சி விமான நிலையம் அருகே அம்பலத்துக்காரன்பட்டியில் ஆந்தை ஒன்று அடிபட்டுக் கிடப்பதாக, திருச்சி மாவட்ட வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
தகவலதை அடுத்து சம்மந்தப்பட்ட இடத்துக்குச் சென்ற வனத்துறையினா், அடிபட்ட ஆந்தையை மீட்டு, கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, சிகிச்சையளித்தனா். தொடா்ந்து, அதைக் கண்காணித்து வருகின்றனா்.
இந்தியன் பாா்ன் ஆவுல்
இந்தியன் பாா்ன் ஆவுல் இனத்தைச் சோ்ந்த அந்த ஆண் ஆந்தைக்கு சுமாா் 2 வயது இருக்கலாம். அந்த வழியே சென்ற விமானம் அல்லது வாகனத்தில் அடிப்பட்டிருக்கலாம். ஆந்தைக்கு உடல்நிலை சரியானதும், பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று விடப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.