
கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை வைத்திருந்த ஜெர்மன் நாட்டு நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு கோவாவில் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் சுற்றுலா விசா மூலம் இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த செபாஸ்தியன் ஹெஸ்லர் (வயது 45) என்ற நபர் தங்கியிருந்த வாடகை குடியிருப்பில் நேற்று (பிப்.3) இரவு காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, அவரிடமிருந்து எல்.எஸ்.டி, 2 கிலோ அளவிலான கஞ்சா, கெட்டமைன் பவுடர், கெட்டமைன் லிக்விட் ஆகிய போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க: தந்தையின் இறுதி சடங்கில் மோதல்! சடலத்தை இரண்டாக பிரிக்கக் கோரிய மூத்த மகன்!
இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.23,95,000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அக்னி சென்குப்தா என்ற நபர் ரூ.7.5 லட்சம் அளவிலான போதைப் பொருளை கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கடந்த ஒரு வாரக்காலமாக செபாஸ்தியனை காவல் துறையினர் பின் தொடர்ந்து, தற்போது கைது செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.