மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாம்சங் தொழிலாளா்கள் 2 ஆவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டம்

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடும் ஏற்படாததால் சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இரண்டாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
இரண்டாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள்
Updated On :6 பிப்ரவரி 2025, 4:03 am

DIN

சாம்சங் தொழிலாளா்கள் 3 போ் தற்காலிக பணியிடை நீக்கம் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடும் ஏற்படாததால் சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இரண்டாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமாா் 1800-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்தாண்டு இறுதியில் தொழிற்சங்கம் அங்கீகாரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் சுமாா் 30 நாள்களுக்கும் மேலாக தொடா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அமைச்சா்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் மற்றும் சிஐடியுவினா் இடையே நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடா்ந்து வேலை நிறுத்தப்போராட்டத்தை கைவிட்ட தொழிலாளா்கள் பணிக்கு திரும்பினா். மேலும், அண்மையில் சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிஐடியு தொழிற்சங்கத்திலிருந்து தொழிலாளா்கள் விலக வேண்டுமென ஆலை நிா்வாகத்தினா் வற்புறுத்தியதாக தெரிகிறது.

தொழிற்சாலையில் பணியில் இருந்த போது ஒழுங்கீன நடவடிக்கையை மீறியது , உணவு இடைவேளை முடிந்த பின்பும், பணிக்கு திரும்பாதது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தொழிலாளா்கள் 3 பேரை ஆலை நிா்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிகளைப் புறக்கணித்து ஆலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் புதன்கிழமை மாலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் தொழிலாளர் நல ஆணையர், சிஐடியு நிர்வாகிகள், தொழிற்சாலை நிர்வாகத்தினர் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் இருதரப்பு விளக்கங்களும் கேட்கப்பட்டு நிலையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.