
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் மீது பறந்த டிரோன் கேமராவை காவல் துறையினர் செயலிழக்க வைத்து வீழ்த்தியுள்ளனர்.
அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் மீது டிரோன்கள் பறக்கவிடுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (பிப்.18) ராமர் ஜென்ம பூமி கோயிலின் வழியாக பறந்த டிரோன் கேமராவை அம்மாநில காவல் துறையினர் டிரோன்களை எதிர்க்கும் அமைப்பின் மூலம் செயலிழக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த டிரோன் கேமராவானது உடனடியாக வெடி குண்டு நிபுணர்களின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் எந்தவொரு ஆபத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், இந்த சம்பவம் குறித்து ராமர் ஜென்ம பூமி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மகா கும்பமேளா 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது! - மமதா பானர்ஜி
இந்நிலையில், அந்த டிரோனை இயக்கியவரைக் கண்டுபிடித்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சமூக ஊடகப்பக்கத்தில் விடியோக்களை பதிவு செய்வதற்காக அவர் அந்த டிரோனை கோயிலின் மீது பறக்கவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக, அக்கோயிலின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள டிரோன் எதிர்ப்பு அமைப்பை அதிகாரிகள் செயல்படுத்தியதன் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஜனவரி மாதம் ராமர் கோவிலில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் போது உத்தரபிரதேச காவல்துறை முதன்முறையாக உயர் தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன டிரோன் எதிர்ப்பு அமைப்பைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.