மதுபோதையில் மின்கம்பிகளின் மீது படுத்த நபர்!

மதுபோதையில் மின்கம்பிகளின் மீது படுத்த நபர்!

ஆந்திராவில் மதுபோதையில் மின்கம்பத்தில் ஏறிய நபரைப் பற்றி..
Published on

ஆந்திரப் பிரதேச மாநிலம் பார்வதிப்புரம் மன்யம் மாவட்டத்தில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் ஏறி மின்சாரம் பாயும் கம்பிகளின் மீது படுத்துக்கொண்டார்.

எம்.சிங்கிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயின் பென்சன் பணத்தைக் கேட்டு சண்டையிட்டுள்ளார். தொடர்ந்து அவரது தாய் பணத்தை தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், கோவமடைந்த அந்நபர் மதுபோதையில் அந்த கிராமத்திலுள்ள மின் கம்பத்தின் மீது ஏறி மின்சார கம்பிகளின் மீது படுத்துக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கிராமவாசிகள் டிரான்ஸ்பார்மரை நிறுத்தி மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இதனால், மொத்த கிராமத்துக்கும் மின்சார இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

இதையும் படிக்க: லக்னௌவில் 5 பேர் கொலை: குற்றவாளி பதிவு செய்திருக்கும் விடியோ

பின்னர், சில நேரம் கழித்து அந்த இளைஞர் மின்சாரக் கம்பத்திலிருந்து கீழே இறங்கி வந்தார்.

இந்நிலையில், தற்போது கிராமவாசிகள் இறங்கி வருமாறு அந்த இளைஞரிடம் கெஞ்சும் விடியோ இணையத்தில் வைரலானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இளைஞரின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com