ஆருத்ரா தரிசனம்: ஜன.13ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆருத்ரா தரிசனம்: ஜன.13ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
Published on
Updated on
1 min read

கடலூர்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர்கோயிலில் ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜன.12-ஆம் தேதி தேரோட்டமும், 13-ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது. இந்த விழாவின் போது நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான கூடுவது வழக்கம். எனவே, அன்றைய நாள் அனைவரும் நடராஜரை தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை ஈடுகட்டும் விதமாக ஜனவரி 13 ஆம் தேதிக்குப் பதில் பிப்ரவரி 2 ஆம் தேதி சனிக்கிழமை கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொங்கல் விடுமுறையும் சேர்ந்து வருவதால் கடலூர் மாவட்டத்து தொடர்ந்து 6 நாள்கள் விடுமுறை கிடைக்கப்பெற்றுள்ளது.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து முன்னேற்பாடுகளை செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com