
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் 2 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே எனப்படும் நேரடியாக இறுதிப் போட்டியாளரைத் தேர்வு செய்யும் போட்டிகள் நடைபெற்றது.
இதில், அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து அதிகப் புள்ளிகளைப் பெற்ற ரயான் முதல் நபராக இறுதிப் போட்டிக்குச் செல்ல தகுதிப் பெற்றார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா வெளியேறிய நிலையில், இந்த வாரமும் ராணவ் மற்றும் மஞ்சரி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணவ் வெளியேறினார். இன்றைய நாள் நடைபெறும் நிகழ்ச்சியில் மஞ்சரி வெளியேறுவார். தற்போது பிக் பாஸ் வீட்டில் 8 போட்டியாளர்கள் உள்ளனர்.
இதையும் படிக்க: குபேரா வெளியீடு எப்போது?
இந்நிகழ்ச்சியில் வழக்கம் போல் 14-வது வாரத்தில் அதாவது, வரும் வாரம் பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்படவுள்ளது.
பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களில் யாராவது எடுக்க விரும்பினால் பணப்பெட்டியில் இருக்கும் தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறலாம்.
ஒரு லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக தொகை உயர்த்தப்படும். இதில் ஒருவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார், வார இறுதியில் 2 பேர் வெளியேற்றப்படுவார்.
இந்த நிலையில், இறுதி வாரத்துக்குள் நுழையும் 5 போட்டியாளர்கள் யார் என்பது குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.