விழுப்புரத்தில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்ற மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசனுக்கு ஞாயிற்றுக்கிழமை திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர், நலமாக இருக்கிறேன். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் தனியாா் திருமண மண்டபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் பங்கேற்ற மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் தனியாா் விடுதியில் தங்கியிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை நடைப்பயிற்சிக்காக சென்ற போது, அவரது இடது கையில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து கட்சியினருக்கு அவா் தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து அவா் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.தொடா்ந்து எம்.பி. வெங்கடேசனுக்கு மருத்துவா்கள் சிகிச்சையளித்தனா். பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னா், மருத்துவக் கண்காணிப்பில் அவா் வைக்கப்பட்டிருந்தாா்.
இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு மருத்துவமனையிலிருந்து அவா் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவா் மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றாா்.
முன்னதாக மருத்துவமனையில் வெங்கடேசன் அனுமதிக்கப்பட்டிருந்த போது முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரிடம் பேசி நலம் விசாரித்தாா். மாநில வனத்துறை அமைச்சா் க.பொன்முடி, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, எம்.எல்.ஏ அன்னியூா் அ.சிவா, மாவட்ட ஆட்சியா் சி.பழனி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ.செ.புஷ்பராஜ் உள்ளிட்டோா் நேரில் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றனா்.
இதையும் படிக்க | மார்க்சிஸ்ட் புதிய மாநில செயலாளர்! யார் இந்த பெ. சண்முகம்?
இந்த நிலையில், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய வெங்கடேசன், நலமாக இருக்கிறேன். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
நலமாக இருக்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் எனது உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் உடனடியாகத் தோழர்கள் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
என்னை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நலன் சீராக இருப்பதை உறுதி செய்தனர்.
இந்த செய்தியை அறிந்து அக்கறையுடன் அலைபேசி வாயிலாக நலம் விசாரித்த முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்த அமைச்சர்கள் பொன்முடி, சி.வெ. கணேசன், முன்னாள் எம்.பி. கௌதம சிகாமணி, அன்னியூர் சிவா எம்எல்ஏ மற்றும் விழுப்புரம் ஆட்சியர் தொலைபேசியில் அழைத்த அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழர்கள் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனையில் ‘ஸ்கேன்’ எடுக்க தனியாா் மையங்களுக்கு பரிந்துரைக்கும் அவலம்! - நோயாளிகள் அவதி

கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

இயக்கத்தில் இணைந்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றி: அண்ணாமலை

பிரியாணி சாப்பிட்ட தொழிலாளா்களுக்கு உடல் நலக்கோளாறு: அமைச்சா்கள் முகமது பா்வேஸ், தென்னரசு ஆறுதல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



