மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சென்னை சங்கமம் நிகழ்ச்சி: பேருந்து நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு!

கலை நிகழ்ச்சிகள் பேருந்து நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

News image
Updated On :15 ஜனவரி 2025, 7:02 am

DIN

“சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சிகள்
சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு – சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம்-கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், மாதவரம்-புறநகர் பேருந்து நிலையம்  ஆகிய இடங்களில் 5 மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுக்கு இணங்க  தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா'  நிகழ்ச்சி கலை பண்பாட்டுத்துறை சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை  முதல்வர் மு.க.ஸ்டாலின் 13.1.2025 அன்று சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா  நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில்  தொடங்கிவைத்தார்.

சென்னையில்  உள்ள 18   இடங்களில் 14.1.2025 முதல் 17.1.2025 வரை நான்கு நாள்கள் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உள்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக  வழங்கப்பட்டுள்ளது .

இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5,000/- ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திரு விழா’ கலை நிகழ்ச்சிகளை  பொதுமக்கள் அதிக அளவில் கண்டுகளிக்கும் வண்ணம் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மின்னணு வீடியோ வாகனங்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு – சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் - கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் - புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 13.1.2025 அன்று முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்த நிகழ்ச்சியையும், 14.1.2025 அன்றைய கலை நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் 15.1.2015 முதல் 17.1.2025 வரை மூன்று நாள்கள் நடைபெறும் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளை சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு – சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் - கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் - புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மாலை  6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை  நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.