மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஜன.25, 26-ல் சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

குடியரசு நாளையொட்டி சென்னையில் ஜன.25, 26 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

News image

ட்ரோன் (கோப்புப்படம்)

Updated On :23 ஜனவரி 2025, 9:55 am

குடியரசு நாளையொட்டி சென்னையில் ஜன.25, 26 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை மெரீனாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு நாள் விழா அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஜன. 26 அன்று நடைபெறவுள்ளது.

இதையொட்டி, சென்னை ராஜ் பவன் முதல் மெரீனா கடற்கரை வரையிலும் அதேபோல முதல்வர் இல்லம் முதல் மெரீனா கடற்கரை வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இப்பகுதிகளில் ஜன. 25, 26 ஆகிய நாள்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காமராஜா் சாலையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு நாளையொட்டி அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்படஉள்ளது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.