காந்தியின் இறப்பைக் கொண்டாடியது யார்? ஆளுநர் ரவிக்கு காங்கிரஸ் கேள்வி!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர். செல்வப்பெருந்தகை கேள்வி?
ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

காந்தியின் இறப்பைக் கொண்டாடியது யார் என்று ஆளுநர் கூறுவாரா? என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர். செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாத்மா காந்தியின் நிகழ்வுகளை சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் நடத்த வேண்டும், அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளன்று காந்தி மண்டபத்தில் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்க மறுக்கிறார் என ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இது பற்றி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர். செல்வப்பெருந்தகை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான இடங்களின் வரலாற்றை அறிந்து கொள்ளவேண்டும். கிண்டியில் 27 ஜனவரி 1956 அன்று ராஜரத்தினம் நாதஸ்வரம் வாசிக்க, சுப்புலக்ஷ்மி ரகுபதி ராகவ பஜனை செய்ய, அப்போதைய மதராஸ் முதல்வர் ராஜகோபாலாச்சாரியால் காந்தி நினைவகம் திறக்கப்பட்டது. அதுவே பின் நாளில் மக்களால் காந்தி மண்டபம் என அழைக்கப்பட்டு பெயரானது.

ஆளுநர், ஆட்சியாளர்கள் தான் சொல்வதை கேட்டே ஆகவேண்டும் என்னும் மனநிலையில் இருந்து விலகவேண்டும். காந்தியடிகளின் நினைவு நாள், ஒவ்வொரு வருடமும் எழும்பூர் அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அனுசரிக்கப்படுகிறது. இதே ஆளுநர் கடந்த 2023 வருடம் முதல்வருடன் காந்தியடிகளின் நினைவு நாளில் மரியாதை செலுத்தினார்.

இதையும் படிக்க: 'காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா? - முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி!

காந்தியின் இறுதிக்காலத்தில் அவரது தனிச்செயலாளராக இருந்த தியாரே லால் நய்யார் தாம் எழுதிய 'மகாத்மா காந்தி கடைசிக் கட்டம்' என்ற நூலில் ,”வெள்ளிக்கிழமையன்று நல்ல செய்தி வரும். எனவே ரேடியோவை தொடர்ந்து கேட்கவும் என்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் சில இடங்களில் ஏற்கெனவே கூறியிருந்தார்கள். அது மட்டுமல்ல, காந்தி கொல்லப்பட்ட செய்தி வெளியானதும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பல இடங்களில் இனிப்புகளை விநியோகித்து கொண்டாடினார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். எந்த சித்தாந்தம் உடையவர்கள் தேசப்பிதாவின் இறப்பைக் கூட கொண்டாடினார்கள் என்று ஆளுநர் சொல்லுவாரா?

'தசரா விழாவின் போது அரக்கனான ராவணனை எரிப்பதுபோல, இனிமேல் காந்தி கொல்லப்பட்டதை ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் சுட்டு கொண்டாடப் போகிறோம்' என ஊடகங்களிடம் பகிரங்கமாக சொன்னேரே புஜா சகுன் பாண்டே, அவர் எந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டவர் என்று ஆளுநர் சொல்லுவாரா?

தந்தை பெரியார் அவர்கள், காந்தி கொடியவன் கோட்சேவால் சுடப்பட்டு இறந்தவுடன், இந்த தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெரியடப்படவேண்டும் என்று கூறியதை ஆளுநருக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com