ஹிமாசலில் 2 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

ஹிமாசல பிரதேசத்தில் போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டதைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஹிமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் 2 கிலோ அளவிலான ஹஷிஷ் எனும் போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பா மாவட்டத்தின் மதோலி பகுதியில் நூர்பூர் காவல் துறையினர் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 2 கிலோ அளவில் செடியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹஷிஷ் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதை பதுக்கிய மக்கான் சன்வால் பகுதியைச் சேர்ந்த ஜகதீஷ் மற்றும் தேகா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: இளைஞரின் திருமணத்தை நிறுத்த மணப்பெண்ணுக்கு விஷம் கொடுத்த பெண் கைது!

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரின் மீதும் போதைச் செடிகளை வைத்திருந்ததற்காக சட்டப் பிரிவு 20 மற்றும் போதைப் பொருள் தடுப்புச் சட்டப் பிரிவு 29 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காவல் துறை தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சட்டவிரோதமாக கடத்தப்படும் போதைப் பொருளுக்கு எதிராக காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்க மேற்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com