தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை
தங்கம் விலை
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.

ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.72,160-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.55 உயா்ந்து ரூ.9,075-க்கும், பவுனுக்கு ரூ.440 உயா்ந்து ரூ.72,600-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.65 உயா்ந்து ரூ.9,140-க்கும், பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.121-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ.4,90 உயர்ந்து ரூ.125-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 4,900 உயா்ந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

Summary

The price of gold in Chennai today is ₹9,971 per gram for 24 karat gold, ₹9,140 per gram for 22 karat gold

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com