
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 40,500 கன அடியாக சரிவு!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 40,500 கன அடியாக நீடிக்கிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40, 500 கன அடியாக சரிவு - கோப்புப் படம்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 40,500 கன அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது.
கர்நாடக அணைகளின் உபரி நீர் திறப்பு குறைப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது புதன்கிழமை இரவு வினாடிக்கு 40,500 கன அடியாக சரிந்த நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 40,500 கன அடியாக நீடிக்கிறது.
இதையடுத்து அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 40,500 கன அடியாக குறைக்கப்பட்டது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 22,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகு வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
Summary
The water level inflowing into Mettur Dam remained at 40,500 cubic feet per second on Thursday morning.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




