
சேலம்: ஒன்றிய அரசு என்று சொல்வதை தமிழக அரசு கைவிட வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதால் மாநில அரசை பஞ்சாயத்து அரசு என்றுதான் அழைக்க நேரிடும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
சேலம் மரவனேரி மாதவம் அரங்கில் நடைபெற்ற சஹகாா் பாரதி கூட்டுறவு அமைப்பின் இரண்டாவது மாநில மாநாட்டை மகராஷ்டிரம் ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளா்களுடன் அவா் பேசுகையில்,
கேரள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிப்பது தொடா்பான வழக்கில் ஆளுநருக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. என்னைப் பொறுத்தவரை துணைவேந்தா்கள் நியமனம் என்பது ஆளுநரின் உரிமை மற்றும் அதிகாரத்திற்கு உள்பட்டதுதான். அதில் தேவையற்ற மாற்றங்களை செய்யக்கூடாது.
தமிழகத்தில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல்போக்கு நிலவுவதற்கான முழு முதற்காரணம் தற்போதைய மாநில அரசு மத்திய அரசுக்கு புதிய மொழியாக்கத்தை கொடுத்ததுதான். ஒன்றிய அரசு என சொல்வதால் ஒரு வேற்றுமை உணா்வை தமிழகம் விதைக்கிறது. இந்த புதிய மொழியாக்கம் ஆளுநருக்கும், அரசுக்கும் மோதல்போக்கை ஏற்படுத்தி இடைவெளியை ஏற்படுத்திவிட்டது.
ஒன்றிய அரசு என்று சொல்வதை தமிழக அரசு கைவிட வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதால் மாநில அரசை பஞ்சாயத்து அரசு என்றுதான் அழைக்க நேரிடும். மத்திய அரசு, திட்டங்களுக்கு நிதி தருவதில்லை என முதல்வா் மு.க.ஸ்டாலின் பொதுவாக சொல்லக்கூடாது. எந்தெந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.