24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (வயது 88),14 வயது சிறுவனாக இருந்தபோது அவரது நெஞ்சுப் பகுதியில் முக்கிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த அறுவைச் சிகிச்சைக்காக பிறரது ரத்தம் அவருக்கு தானமாக வழங்கப்பட்டதினால், தானும் வளர்ந்தவுடன் ரத்த தானம் வழங்குவதாக உறுதி மொழி எடுத்துக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 1954 ஆம் ஆண்டு தனது 18 ஆம் வயதில் ரத்த தானம் வழங்கத்துவங்கியபோது அவரது ரத்தத்தில் அறியவகை ’ஆண்டி டி’ எனும் நோய் எதிர்ப்பாற்றல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் எதிர்ப்பாற்றலானது கர்ப்பிணி பெண்களின் கருவிலுள்ள குழந்தைக்கு தாயிடமிருந்து வரும் ஆபத்தான ஆண்டிபாடிகளை தடுக்கும் எனக் கூறப்படுகிறது. இதனையறிந்த ஹாரிசன் அன்று முதல் தனது வாழ்நாள் முழுவதும் ரத்த தானம் வழங்குவதை வழக்கமாக்கிக் கொண்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தனது 81ஆம் வயதில் ரத்த தானம் வழங்குவதிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட ஹாரிசன் அதுவரை 1,173 முறை ரத்த தானம் வழங்கியுள்ளார். அதன்மூலம், சர்வதேச அளவில் அவர் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், 2005 ஆண்டு முதல் உலகிலேயே அதிகளவிலான ரத்த பிளாஸ்மாக்களை வழங்கிய சாதனைப் பட்டத்தை இவர் தக்கவைத்திருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்க நபர் ஒருவர் இந்த சாதனையை முறியடித்தார்.
இந்நிலையில், ‘எ மேன் வித் கோல்டன் ஆர்ம்’ அதாவது தங்கக் கரம் கொண்ட மனிதர் என வர்ணிக்கப்பட்ட ஹாரிசன் கடந்த பிப்ரவரி 17 அன்று ஆஸ்திரேலியாவின் சௌத் வேல்ஸ் நகரத்தில் தனது 88 ஆம் வயதில் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் நேற்று (மார்ச்.3) தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஆஸ்திரேலிய செஞ்சிலுவை இயக்கத்துடன் இணைந்து அந்நாட்டு ஆய்வாளர்கள் ஹாரிசனின் ரத்ததில் இயற்கையாகவே இருந்த நோய் எதிர்ப்பாற்றலை செயற்கை முறையில் ஆய்வகத்தில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

‘தானாக முன்வந்து ரத்த தானம் செய்வோரை எந்த நாளும் போற்ற வேண்டும்’

தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்குப் பாராட்டு

டிஜிட்டல் கைது: முதியவரிடம் ரூ. 20 லட்சம் மோசடி!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



