
சென்னை மேயர் பிரியா தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேசுவாரா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட கடைகளின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் எனவும், ஒரு வாரத்துக்குள் அதனை மாற்ற வேண்டும் எனவும் மேயர் பிரியா கூறியிருக்கிறார். தங்கை பிரியா தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேசுவாரா?
முதலில் தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேசுங்கள், 5 நிமிடம் பேசுங்கள். உங்கள்(திமுக) பள்ளிகளில் ஹிந்தி பாட மொழியாக இருக்கிறதா இல்லையா? ஆங்கிலம் பயிற்றுப் மொழியாக இருக்கிறதா இல்லையா? தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் என்ற முயற்சியை நிறுத்துங்கள்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... மும்மொழியும் செம்மொழியும் வேண்டாத ஆணியும்!
பெயர் பலகையில் மூன்றில் இரண்டு மடங்கு தமிழும் ஒரு மடங்கு ஆங்கிலமும் இருக்க வேண்டும் சட்டம் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்., ஆனால் அவரால் செயல்படுத்த முடியவில்லை, தொடர்ந்து வந்த தலைவர்களும் அதை செயல்படுத்தவில்லை.
தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு தொடர்பான குறித்த கேள்வி பதிலளித்த அவர், “அவருக்கு பாதுகாப்புத் தேவைப்பட்டால் அளிக்கலாம். என்னை மாதிரி ஆள்களுக்கு தேவையில்லை. நான்தான் நாட்டின் பாதுகாப்பு, எனக்கு பாதுகாப்பு அவசியமில்லை.” என்று தெரிவித்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.