12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலகத்தில் தீ விபத்து!

சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு.

Published On :

சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் முதல் மாடியில் இன்று(மார்ச் 27) பிற்பகல் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

உடனடியாக வேப்பேரி பகுதி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விரைவாக தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

மின் வயரில் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டதால் சிக்னல் தகவல் அனுப்புவதில் பிரச்னை ஏற்பட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை சரிசெய்யும் பணியில் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.