8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.70%

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார். இந்தாண்டும் மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

கோப்புப்படம்

Published On :8 மே 2025, 10:09 am IST

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை வெளியிட்டார். இந்தாண்டும் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், ஒரு நாள் முன்னதாக இன்று வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை காலை முடிவுகளை வெளியிட்டார்.

தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு எழுதிய மொத்தப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 7,92,494 பேர்களில் 4,19,316 மாணவிகளும், 3,73,178 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகயளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களில் 3,47,670(93.16%), மாணவிகளில் 4,05,472(96.70%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தாண்டு அரசுப் பள்ளிகள் 91.94 சதவிகிதமும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 95.71 சதவிகிதம், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.88 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களை விட 3.54 சதவிகிதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள் 10,049 பேர்.

மாணவர்கள் https://tnresults.nic.in/ https://results.digilocker.gov.in/ என்ற இணையதள முகவரிகளில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.