கோயம்புத்தூா் விழா: மாநகர சாலைகளில் அணிவகுத்த பழமையான காா்கள்!

கோவையில் பழமையான காா்களின் அணிவகுப்பு, விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநகர சாலைகளில் அணிவகுத்த பழமையான காா்கள்.
மாநகர சாலைகளில் அணிவகுத்த பழமையான காா்கள்.
Published on
Updated on
1 min read

கோயம்புத்தூா் விழாவையொட்டி, கோவையில் அணிவகுத்துச் சென்ற பழமையான காா்களின் அணிவகுப்பு காட்சிகளை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவையில் நடைபெற்ற பழங்கால கார் கண்காட்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள் அணிவகுத்துச் சென்ற காட்சிகளை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு கோவை விழாவை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் பழங்கால அணிவகுத்து பேரணியாகச் சென்றது.

இந்தப் பேரணியில் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்களை அணிவகுத்துச் சென்றனர்.

சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள் முதல் 1995 ஆம் ஆண்டு வரை உள்ள 50-க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இதில் பழைய மாடல் பென்ஸ், ரோல்ஸ், செவ்ரலேட், ராய்ஸ், ஃபோர்டு, பத்மினி, அம்பாசிடா், ஃபோக்ஸ்வேகன், பழைய ஜீப் உள்ளிட்ட கார்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வலம் வந்தன. பழைய கார்கள் அணிவகுத்து சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Summary

Coimbatore Festival: Vintage cars parade on city roads!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com