

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் நீடித்து வரும் தொடர் மழை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், அதிக அளவாக கோடியக்கரையில் 203. 4 மி. மீ பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு அருகே வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயலின் காரணமாக காவிரிப் படுகை, தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, வேதாரண்யத்தில் சனிக்கிழமை காலை (நவ.29) 6 மணி நிலவரப்படி145.6 மி. மீ, தலைஞாயிறு 89.மி.மீ, கோடியக்கரை 203. 4 மி. மீ மழை பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு தரைக்காற்றுடன் இணைந்த சாரல் மழைப் பொழி, படிப்படியாக கனத்து தொடர் மழையாக நீடித்து வருகிறது.
கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.