தை அமாவாசை! கோடியக்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

வேதாரண்யம், கோடியக்கரை கடலில் இன்று காலை முதல் புனித நீராடல் செய்த மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த  மக்கள்
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்
Updated on
1 min read

தை அமாவாசையையொட்டி, வேதாரண்யம், கோடியக்கரை கடலில் இன்று காலை முதல் புனித நீராடல் செய்த மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் தை, ஆடி அமாவாசை, அர்த்ததோயம், மகோதயம், மாசி மகம் ஆகிய நாள்களில் புனித நீராடல் செய்யும் மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

கோடியக்கரை  கடலில் மக்கள் புனித நீராடல்
கோடியக்கரை கடலில் மக்கள் புனித நீராடல்

இந்த நிலையில், தை அமாவாசை நாளான புதன்கிழமையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான மக்கள் அதிகாலை தொடங்கி புனித நீராடல் செய்தனர்.

கோடியக்கரை முழுக்குத்துறையில் நீராடியவர்கள், தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் (நீர்சடங்கு) செய்தனர். பின்னர் அங்குள்ள சித்தர் கோயில், ராமர் பாதம் உள்ளிட்ட இடங்களில் வழிபட்டனர்.

அதேபோல், வேதாரண்யம் சன்னதி கடற்பரப்பில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மணிக்கர்ணிகையில் இறைவனை வழிபட்டனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த  மக்கள்
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த  மக்கள்
தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
Summary

Kodiyakarai: On the occasion of Thai Amavasya, thousands of people performed ancestral rituals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com