17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தங்கம் விலை சரிவு: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து 2 நாள்களாக மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில், வியாழக்கிழமை கணிசமாகக் குறைந்துள்ளது குறித்து...

News image

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்தது. - கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 10:36 am IST

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து 2 நாள்களாக மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில், வியாழக்கிழமை கணிசமாகக் குறைந்துள்ளது; இது நகை வாங்குவோருக்கு நிம்மதியை அளித்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,15,840-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த ஜூன் 1-ஆம் தேதி கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,500-க்கும், பவுனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,16,000-க்கும், செவ்வாய்க்கிழமை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையானது. தொடா்ந்து, 2-ஆவது நாளாக புதன்கிழமையும் விலையில் மாற்றமுமின்றி விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.14,480-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,15,840-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

அதேபோன்று, வெள்ளி விலையும் தொடா்ந்து 2-ஆவது நாளாக மாற்றமின்றி கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.90 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.285-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,85 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold prices in Chennai have dropped sharply today, bringing relief to jewelry buyers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.