மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

பிரதமர் மோடி இஸ்ரேல் சென்று திரும்பியதும் போர் தொடங்கியது! - காங்கிரஸ் எம்.பி.

பிரதமர் மோடி இஸ்ரேல் சென்று திரும்பிய பிறகுதான் ஈரான் போர் தொடங்கியது என காங்கிரஸ் எம்.பி. விமர்சித்துள்ளது குறித்து...

News image

மாணிக்கம் தாகூர் - IANS

Updated On :9 மார்ச் 2026, 1:19 pm IST

பிரதமர் மோடி இஸ்ரேல் சென்று திரும்பிய பிறகுதான் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கியது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு இன்று (மார்ச் 9) தொடங்கியிருக்கும் நிலையில், மேற்காசிய போர் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

முன்னதாக, பிடிஐ-க்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டியில், “மேற்கு ஆசியா பற்றி எரிவது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் பிரதமர் மோடி மௌனம் காக்கின்றார். அவர் மேற்கு வங்கத் தேர்தலில் தீவிரமாக உள்ளார். மோடி அரசில் உள்ள பெரிய பிரச்னை உலகளாவிய நிலைமையைச் சரியாக மதிப்பிட முடியவில்லை. மோடி இஸ்ரேலுக்குச் சென்று வந்தார். ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுக்கத் தொடங்கியது. ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட பிறகும் இந்தியாவிடமிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை. நாடாளுமன்றம் வெறும் அறிவிப்புப் பலகை அல்ல. ஆகையால் மேற்காசிய சிக்கல் குறித்து தெளிவாக விவாதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேற்காசியப் போர் பற்றியும் அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தது பற்றியும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

Congress MP Manickam Thakur has said that the war between Israel and Iran started only after Prime Minister Modi returned from Israel.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.