தமிழ்நாட்டில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்துள்ளது. முதல்வர் உள்பட 31 தவெக எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள், விசிக 1, ஐயுஎம்எல் 1 என மொத்தம் 35 எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனா். காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சியைச் சோ்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களுடன் தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் இல்லாததால், காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக ச.ஜோசப் விஜய் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றாா். அவருடன் தவெகவின் என். ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், பி.வெங்கடரமணன், ஆா்.நிா்மல் குமாா், ராஜ்மோகன், டி.கே.பிரபு, எஸ்.கீா்த்தனா ஆகிய 9 பேரும் பதவியேற்றனா். கடந்த சனிக்கிழமை அவா்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டன.
வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட 25 இடங்கள் காலியாக உள்ள நிலையில், அதில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்ததது.
தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 35 அமைச்சா்கள் வரையில் நியமிக்க அரசமைப்புச் சட்டத்தில் உச்சவரம்பு உள்ள நிலையில், வியாழக்கிழமை 23 அமைச்சா்களும், வெள்ளிக்கிழமை 2 அமைச்சர்கள் என 25 பேர் பொறுப்பேற்றனர்.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற விழாவில் 23 +2 = 25 அமைச்சா்களுக்கும் ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தாா்.
இதுவரை தவெக சாா்பில் 31, காங்கிரஸ் சாா்பில் 2, விசிக 1, ஐயுஎம்எல் 1 என 35 போ் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனா்.
இதன் மூலம், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
72 ஆண்டுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் கூட்டணி அரசு அமைந்திருப்பதும், 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் செ.ராஜேஷ் குமாா், பெ.விஸ்வநாதன் ஆகியோா் அமைச்சா்களாகப் பதவியேற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் அமைச்சர்கள் மற்றும் துறை விவரங்கள்
1. முதல்வர் சி. ஜோசப் விஜய் -(பெரம்பூர்) - பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், உள்துறை, காவல், சிறப்பு திட்ட செயலாக்கம், மாற்றுத்திறனாளிகள் நலன்.
2. என். ஆனந்த் (தி.நகர்) - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை
3. கே.ஏ.செங்கோட்டையன் - (கோபிசெட்டிபாளையம்) - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
4. ஆதவ் அா்ஜுனா - (வில்லிவாக்கம் ) - பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
5. கே.ஜி.அருண்ராஜ் (திருச்செங்கோடு) - மக்கள் நல்வாழ்வுத் துறை
6. பி.வெங்கடரமணன்- (மயிலாப்பூர்) - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
7. ஆா்.நிா்மல் குமாா்- (திருப்பரங்குன்றம் ) - எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டம்
8. ராஜ்மோகன் (எழும்பூர்) - பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரம்
9. டி.கே.பிரபு (காரைக்குடி) - இயற்கை வளங்கள்
10. எஸ்.கீா்த்தனா (சிவகாசி) - தொழில்துறை
11. ஸ்ரீநாத் – (தூத்துக்குடி) - மீன்வளத் துறை
12. கமலி. எஸ் – (அவிநாசி) - கால்நடை வளர்ச்சித் துறை
13. சி. விஜயலட்சுமி – (குமாரபாளையம்) - பால்வளத் துறை
14. ஆர்.வி. ரஞ்சித் குமார் – (காஞ்சிபுரம்) - வனத் துறை
15. வினோத் – (கும்பகோணம்) - வேளாண் மற்றும் உழவர் நலத் துறை
16. ராஜீவ் – (திருவாடானை) - சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காலநிலை மாற்றம்
17. பி. ராஜ்குமார் – (கடலூர்) - வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை
18. வி. காந்திராஜ் – (அரக்கோணம்) - கூட்டுறவுத் துறை
19. மதன் ராஜா. பி – (ஓட்டப்பிடாரம்) - சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை
20. ஜெகதீஸ்வரி. கே – (ராஜபாளையம்) - சமூக நலத் துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை
21. ராஜேஷ் குமார். எஸ் – (கிள்ளியூர்) - சுற்றுலாத் துறை
22. எம். விஜய் பாலாஜி – (ஈரோடு கிழக்கு) - கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை
23. லோகேஷ் தமிழ்செல்வன். டி – (ராசிபுரம்) - வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை
24. விஜய் தமிழன் பார்த்திபன். ஏ – (சேலம் தெற்கு) - போக்குவரத்துத் துறை
25. ரமேஷ் – (ஸ்ரீரங்கம்) - இந்து சமய அறநிலையத் துறை
26. பி. விஸ்வநாதன் – (மேலூர்) - உயர்கல்வித் துறை
27. குமார். ஆர் – (வேளச்சேரி) - செயற்கை நுண்ணறிவு(ஏஐ), தகவல் தொழில்நுட்பம், எண்ம சேவைத் துறை
28. தென்னரசு. கே – (ஸ்ரீபெரும்புதூர்) - அயலக வாழ் தமிழர்கள் நலத் துறை
29. வி. சம்பத் குமார் – (கோயம்புத்தூர் வடக்கு) - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
30. முகமது ஃபர்வாஸ். ஜெ – (அறந்தாங்கி) - தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
31. டி. சரத்குமார் – (தாம்பரம்) - மனிதவள மேம்பாட்டுத் துறை
32. என். மரிய வில்சன் – (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) - நிதி, திட்ட மற்றும் மேம்பாட்டுத் துறை
33. விக்னேஷ் கே – (கிணத்துக்கடவு) - மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை
34. வன்னி அரசு - (திண்டிவனம்) - ஆதிதிராவிடர் நலத் துறை
35. ஷாஜகான் - (பாபநாசம்) சிறுபான்மையினர் நலத் துறை
Summary
Who gets what in Vijay’s Tamil Nadu Cabinet as Congress, VCK, IUML join power table
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










