பொதுவாக வீட்டில் அனைவரும் பயன்படுத்தும் ஆடைகளை தினந்தோறும் துவைக்கும் பழக்கம் இருப்பவர்கள்கூட, போர்வை, தலையணையை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. காரணம் அது பற்றி பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாததே.
எனவே வீட்டில் அனைவரும் அணியும் ஆடைகளை எப்படி சுத்தமாக வைத்திருக்கிறோமோ அதுபோலவே பலவற்றையும் போதுமான அக்கறையோடு கவனிக்க வேண்டும்.
வீட்டில் படுக்கை விரிப்பு, போர்வை, தலையணையை குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது நிச்சயம் துவைத்து வெய்யிலில் உலர்த்தி பயன்படுத்த வேண்டும்.
ஜீன்ஸ் பேண்ட் என்றால் ஆறு மாதத்துக்கு துவைக்கவே வேண்டாம் என்றெல்லாம் நினைக்கக் கூடாது. அடிக்கும் வெய்யிலுக்கு ஜீன்ஸ் பேண்ட் எவ்வளவு வியர்வையைத்தான் தாங்கும். குறைந்தது ஐந்து முறைப் பயன்படுத்தியதுமே துவைத்து விடுங்கள்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தலையணையை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து எடுக்கலாம். நல்லதுதான்.
வீட்டில் பயன்படுத்தும் டவல்களை ஒவ்வொரு முறை பயன்படுத்தியதும் துவைத்து விடுவது நல்லது. அல்லது இரண்டாவது முறை பயன்படுத்தியதும் துவைத்து விடுவதே சாலச் சிறந்தது.
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பால் தேய்க்கும் பிரஷ்ஷை மாற்றி விடலாம்.
உள்ளாடைகளை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிவிட வேண்டும்.
கால் மிதியடிகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை துவைத்து விடவும்.
குடிநீர் பாட்டில்களை நிச்சயம் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் முன்பு நன்கு தேய்த்துக் கழுவி பயன்படுத்த வேண்டும்.
Summary
When did last wash the blankets pillows? Do you remember?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெஸ்ஸி புறக்கணிப்பு? ஒரு கோல், அசிஸ்ட்கூட செய்யாத ரோட்ரிக்கு தங்கப் பந்து விருது நியாயமா?

வீட்டைப் பராமரிப்பதற்கான வார அட்டவணை!

‘வீட்டிலேயே வேலை’ பாா்க்கும் முறை ரத்து: முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

டிஷ்வாஷர்கள் தண்ணீரை மிச்சம் பிடிக்குமா?
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2



