மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கருவளையத்தைப் போக்கும் எளிய முறை!

கண்களைச் சுற்றி கருவளையம் வருவது இயல்பானது. மொபைல் போன், கணினி பயன்பாடு, தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது. 

News image
Updated On :30 ஜூன் 2021, 12:34 pm

தினமணி

கண்களைச் சுற்றி கருவளையம் வருவது இயல்பானது. மொபைல் போன், கணினி பயன்பாடு, தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது. 

ஆனால் கருவளையம் தற்காலிகமானதுதான். இதனை வீட்டிலுள்ள பொருள்களை பயன்படுத்தியே சரிசெய்ய முடியும். 

அந்தவகையில் கருவளையத்தைப் போக்குவதில் உருளைக்கிழங்கு முக்கியப் பொருளாக இருக்கிறது. 

உருளைக்கிழங்கை தோல் சீவிய பின்னர் தேங்காய் போல துருவி கண்களை மூடி அதன் மீது மெல்லிய துணியை வைத்து அதில் துருவிய உருளைக்கிழங்கை வைக்க வேண்டும். ஒரு 10 நிமிடங்கள் இவ்வாறு வைத்திருக்கலாம். 

உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு அரைத்து அந்த பேஸ்ட்டை கண்களின் மேலும் கீழும் அப்ளை செய்யலாம். இல்லையெனில் அந்த சாறை மட்டும் பிழிந்து இரவில் தூங்கும்முன் கண்களின் மேலும் கீழும் தடவிவிட்டு படுக்கலாம். 

உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்து 15 நிமிடங்கள் கழித்து எடுக்கலாம். 

அதிகமாக கருவளையம் உள்ளவர்களுக்கும் ஒரு வாரத்தில் மாற்றம் தெரியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.